35 வயதுக்கு மேல் இருப்பவர்கள் இதை தவறாமல் செய்ய வேண்டும் - ஆர்ஜே பாலாஜி
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், என பன்முக திறமையுடன் வலம் வருபவர் ஆர்ஜே பாலாஜி. தொடக்கத்தில் வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் எதிர் நீச்சல், தீயா வேல செய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் நானும் ரௌடிதான் படமே அவ்ருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த அவர் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றர். சமீபத்தில் சூர்யா நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளிவந்த கருப்பு பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
ஆர்.ஜே.பாலாஜி அவ்வப்போது சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் 35, 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும் அரசு மருத்துவ திட்டங்கள் மற்ற்றும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் சுகாதார பேக்கேஜ்கள் மூலமாகவும் உடல் பரிசோதனை செய்துகொள்ள முடியும் என்ற்று கூறியுள்ளார்.
