சிவகார்த்திகேயன் தற்போது தனது 20 வது திரைப்பட வேளைகளில் மிகவும் பிசியாக இயங்கி வருகிறார். படக்குழுவும் அவரை விட பிசியாக அவருக்கு ஹீரோயின் தேடி வருகிறது. பட கதையின் படி, ஹீரோயின் வெளிநாட்டை சேர்ந்தவர்.
அதனால், படக்குழு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு ஹீரோயினை தீவிரமாக தேடி வந்தது. ஒரு வெளிநாட்டு ஹீரோயினை ஓகே செய்து, அவருக்கு விசா எடுத்து இந்தியா வரவைத்து அதன் பின்னர் படமாக்க வேண்டும்.
இதையும் படியுங்களேன் –விஜய் பையன் கூப்பிட்டால் உடனே சென்றுவிடுவேன்.! அவ்வளவு நம்பிக்கையா?!
மேலும் , இந்த கதாபாத்திரத்திற்கு பாலிவுட் ஹீரோயினையும் தேடி வந்த நிலையில், தற்போது RRR படத்தில் ஜூனியர் NTRக்கு ஜோடியாக நடித்த ஒலிவியா மோரிஸ் அவர்களை படக்குழு ஓகே செய்துள்ளதாம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் டான் திரைப்படம் வெளியாக உள்ளது. மே மாதம் டான் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…