Categories: Cinema News latest news

எனக்குன்னே வருவீங்களா!…சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழு…

பாகுபலி படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ அசத்தலாக இருந்தது. பாகுபலி படம் போலவே இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஜனவரி 7ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறாது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தை மார்ச் 25ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், டான் திரைப்படம் மார்ச் 25ம் தேதி வெளியாவதாக இன்று காலைதான் அறிவித்தார் சிவகார்த்திகேயன். ஆனாலும், ஆர்.ஆர்.ஆர் பட ரிலீஸால் டான் படத்திற்கு எந்த பிரச்சனையும் வராது எனவும், 2 படங்களுக்கும் தேவையான திரையரங்குகள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள்..

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா