Connect with us
rs shivaji

Cinema News

நான் உயிரோட இருக்க காரணமே கமல்தான்!.. மனம் உருகி பேசிய ஆர்.எஸ் சிவாஜி..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் ஆ.எஸ்.சிவாஜி. கமல் தயாரித்து நடித்து பெரும் வெற்றிபெற்ற அபூர்வசகோதரர்கள் திரைப்படத்தில் போலீசாக வரும் ஜனகராஜுடன் எப்போதும் உடன் வவரும் சக போலீஸ் அதிகாரியாக ஆர்.எஸ்.சிவாஜி நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் அடிக்கடி பேசிய ‘சார் நீங்க எங்கயோ போயீட்டீங்க சார்’ வசனம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால் கண்டிப்பாக இவருக்கு ஒரு சிறிய வேடம் இருக்கும். அந்த அளவுக்கு பல படங்களில் ஆர்.எஸ்.சிவாஜி நடித்துள்ளார். திறமையான நடிகராக இவர் கருதப்படுகிறார். ஒரு காட்சியில் நடித்தாலும் அசத்திவிடுவார். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரர் ஆவார். 1981ம் வருடம் முதல் இவர் சினிமாவில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நடிப்பில் சிறந்த படமாக கருதப்பட்ட கார்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல் சார்தான். என் இதயத்தில் 4 ஓட்டைகள் இருந்தது. சிகிச்சைக்கு அவரிடம்தான் உதவி கேட்டேன். எனக்கான எல்லா சிகிச்சையையும் அவரே பார்த்துக்கொண்டார். அதேபோல், கொரோனா காலத்தில் மாத்திரைகள் வாங்கவும் அவரிடம் உதவி கேட்டேன். அப்போது முதல் இப்போது வரை எனக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து மாதம் மாதம் மாத்திரைகள் வந்து கொண்டிருக்கிறது. கமல் சார் இல்லையேல் நான் இல்லை’ என உருகி பேசியுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top