×

ராஷ்மிகா வீட்டில் ரூ.250 கோடி பறிமுதலா?.. நடிகை ரியாக்‌ஷன் என்ன?
 

தெலுங்கில் நடிகை விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் ஜோடி போட்டு நடித்தவர் ராஷ்மிகா மந்தனா.
 

அதன்பின் ராஷ்மிகா தெலுங்கில் முன்னனி நடிகையாக மாறினார். சமீபத்தில், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அவர் நடித்திருந்த ‘சரிலேரு நீக்கெவரு’திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலுக்கு ராஷ்மிகா முன்னேறினார். 

கடந்த 16ம் தேதி கர்நாடகா குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்பின் ராஷ்மிகாவிற்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் காட்டப்படாத ரூ.25 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.250 கோடி மதிப்புள்ள ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், மைசூரில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ராஷ்மிகாவும், அவரின் தந்தையும் சில ஆவணங்களை சமர்பிக்க வந்தனர். அப்போது ரூ.250 கோடி ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டதாக எழுந்த செய்தியை ராஷ்மிகா மறுத்தார். அப்படி வெளியான செய்தி அபத்தம் எனவும் அவர் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News