Exclusive : KHxRKல் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான் ரஜினி மற்றும் கமல் 47 ஆண்டுகளுக்கு பின் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளார்கள். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK Reunion என்று பெயரிட்டுள்ளார்கள். நெல்சன் இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்தது. இப்படத்திற்கு நெல்சன் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இன்பநிதி தயாராகிறார்.
KHxRK Reunion படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நடிக்ர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் முக்கிய வேடத்தில் ருக்மணி வசந்த நடிக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி, காந்தாரா படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
