கணம் இயக்குநருடன் இணைந்த காந்தாரா நடிகை!

 
rukmani

 

காந்தாரா படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ருக்மிணி வசந்த் தற்போது கணம் பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 

மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


இப்படத்தின் அறிவிப்புடன் ருக்மிணி வசந்த் நடிக்கும் தாரா கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் மற்றும் நடிகர்கள் தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோர் தாரா கதாபாத்திரத்திற்காக தேடும்போது ருக்மிணி வசந்த் அறிமுகமாகும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்கிய ஸ்ரீ கார்த்திக் தற்போது புதிய கதைக்களத்துடன் களமிறங்குகிறார். படத்தின் தலைப்பு மற்றும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web