ஹேப்பி மேரிட் லைஃப் அனிருத்!.. வாழ்த்திய மதராஸி ஹீரோயின்!..

 
rukmani

அனிருத் மற்றும் காவ்யா மாறனுக்கு இன்று கிரீஸ் நாட்டில் திருமணம் நடந்து வரும் நிலையில், நடிகை ருக்மணி வசந்த் அனிருத்திற்கு திருமண வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படத்தின் மூலம் பிரபலமான  ருக்மணி வசந்த் தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ருக்மணி வசந்த் மற்றும் அனிருத் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும், ருக்மணி வசந்த் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்றார்.

இந்நிலையில் அனிருத்திற்கு அவர் தெரிவித்த திருமண வாழ்த்து மற்றும் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

From Around the web