×

இணையத்தில் பரவும் வதந்திகள்… மாநாடு ஷூட்டிங் பற்றி தயாரிப்பாளர் அறிவிப்பு!

நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை பல தடங்கல்களுக்குப் பின் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

 

நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை பல தடங்கல்களுக்குப் பின் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

நடிகர் சிம்பு லாக்டவுனுக்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில நடத்தி வந்தார். இந்த படம் பல தடங்கல்களுக்குப் பின்னர் பல ஆண்டு தாமதத்துக்குப் பின்னர் உருவானது. பின்னர் லாக்டவுன் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாடு படத்தில் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இப்போது சுசீந்தரன் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்காது என இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அது சம்மந்தமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில் ’தடைகள் உடைந்து… கொரோனா பாதிப்புகள் கடந்து #மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News