×

மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்க சிங்கங்களை பயன்படுத்துகிறதா ரஷ்ய அரசு – வைரலாகும் புகைப்படம் !

கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க ரஷ்ய அரசாங்கம் சிங்கங்களை சாலைகளில் உலாவ விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க ரஷ்ய அரசாங்கம் சிங்கங்களை சாலைகளில் உலாவ விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கையாக மக்கள் தங்களை சமூகவிலக்கம் செய்துகொள்ளெவேண்டும் எனக் கூறப்பட்டு வருகிறது. இதனை ஏற்று உலகம் முழுவதும் மக்கள் தங்களை வீட்டுக்குள்ளேயே முடக்கியுள்ளனர். இந்நிலையில் ரஷ்ய அரசாங்கம் தன் மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக சாலைகளில் 500 சிங்கங்களை உலவவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக சிங்கம் ஒன்று நடு சாலையில் தனியாக நடக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த செய்தியையும் புகைப்படத்தையும் பலரும் பரப்ப, அந்த செய்தி போலியானது எனத் தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட கொலம்பஸ் என்ற சிங்கம் எனத் தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக 2016 ஆம் ஆண்டு தினசரிகளில் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News