×

லாரிக்குள் பதுங்கி சென்ற ரஷ்ய பெண்ணும் அவரது காதலரும் கைது!

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இந்தியக் காதலனுடன் சிம்லாவுக்குள் நுழைய லாரியில் ஒளிந்து வந்தது போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இந்தியக் காதலனுடன் சிம்லாவுக்குள் நுழைய லாரியில் ஒளிந்து வந்தது போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரி டிரைவர், உதவியாளர் உள்படக் காதல் ஜோடி என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை தனிமைப்படுத்தும் மையத்திற்குக் கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நொய்டாவிலிருந்து புறப்பட்டு லாரியில் வந்த அந்த காதல் ஜோடி, சிம்லா சென்று தஞ்சமடைய முயன்றுள்ளனர். குலுமணாலி நிர்மானந்த் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் வழக்கம்போல் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது குறிப்பிட்ட லாரியை போலீசார் சோதித்தபோது அதில் அந்த லாரியின் ஓட்டுநர், உதவியாளர் சந்தேகற்குரிய வகையில் பதிலளித்துள்ளனர். இதனால் தொடர்ந்து லாரியை சோதித்தபோது அதில் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுப் பெண் ஒருவரும், 20 வயது மதிக்கத்தக்க இந்திய இளைஞர் ஒருவரும் பதுங்கி கிடந்துள்ளனர்.

அவர்களிடம் ஊரடங்கு நேரத்தில் பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்ட பாஸ்களும் இல்லை. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இந்த காதல் ஜோடிக்கு உதவிய லாரி ஓட்டுநர், உதவியாளரையும் கைது செய்தனர்.

ஆண்கள் 3 பேரையும் ஷோகி பகுதியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பி வைத்த போலீஸ், அந்த ரஷ்யப் பெண்ணை தாலியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்குக் கொண்டு சேர்த்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News