Categories: Cinema News latest news throwback stories

எம்ஜிஆரை விமர்சித்து படம் எடுத்த எஸ்.ஏ. சந்திரசேகர்!..தலைவர் கூப்பிட்டு வச்சு என்ன செஞ்சார் தெரியுமா?..

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஒரு சில படங்களில் அப்பொழுது இருந்தே உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். பல பெரிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறாராம். அப்போது எம்ஜிஆர் சந்திரசேகரை மிஸ்டர்.சந்திரசேகர் என்று தான் அழைப்பாராம்.

காலங்கள் போக போக 1987 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கிறார். சந்திரசேகர் கலைஞரின் வசனத்தில் நீதிக்கு தண்டனை என்ற படத்தை எடுத்தாராம். படம் அந்த ஆண்டில் மே மாதல் ரிலீஸாக 30 நாள்களுக்கும் மேலாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிற சமயம்.

இதையும் படிங்க :லவ் டுடே படத்தில் விஜயிற்கு நன்றி சொன்னது சரி… இவருக்கு ஏன் சொல்லல… கடுப்பில் நெட்டிசன்கள்…

கலைஞரின் வசனம் மேலும் எதிர்கட்சி தலைவராகவும் இருக்கிறார். அதனால் எம்ஜிஆரின் அரசை விமர்சித்து அந்த படம் வெளிவந்ததாம். ஒரு சமயம் எம்ஜிஆர் சந்திரசேகரை அழைத்ததாக தகவல் வர திருப்பூர் மணிமாறன் சந்திரசேகரை அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். 4.30 மணிக்கு அப்பாய்மெண்ட் என்று சொல்லி 6.30 வரைக்கும் இவரை காக்க வைத்திருக்கிறார் எம்ஜிஆர்.

நேரம் ஆக நேரம் ஆக சந்திரசேகருக்கு ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. உள்ளே அழைத்திருக்கிறார் எம்ஜிஆர். எடுத்த படத்தை பற்றி பேசாமல் ‘என்னுடைய எம்ஜிஆர் பிக்சர்ஸ் ஏகப்பட்ட படங்களை எடுத்திருக்கிறது.ஆனால் இப்பொழுது எந்த படமும் வெளியாகாமல் சும்மாதான் இருக்கிறது. ஆகவே நீங்கள் வருடத்திற்கு இரண்டு என என் பேனரில் படம் எடுக்க முடியுமா’ என்று கேட்டாராம் எம்ஜிஆர். இதைக் கேட்ட் சந்திரசேகருக்கு ஒரே ஆச்சரியம். அவரை விமர்சித்து படம் எடுத்திருக்கோம். ஏதோ மிரட்டுவார்கள் என எண்ணி வந்தவருக்கு ஆச்சரியம் தான் காத்திருந்ததாம். இதன் மூலம் எம்ஜிஆர் எப்பொழுது திறமையானவர்களை மிகவும் மதிக்க கூடியவர் என்று சந்திரசேகர் என்று சொல்லி முடித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini