×

எஸ் பேங்கின் வீழ்ச்சி - போன்பே எடுத்த அதிரடி முடிவு !

எஸ் பேங்க் பல்வேறு சிக்கல்களில் சிக்கி இப்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் போன் பே முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

எஸ் பேங்க் பல்வேறு சிக்கல்களில் சிக்கி இப்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் போன் பே முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

எஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கி பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனை ஆப்பாக செயல்பட்டு போன் பேவும் பாதிக்கப் பட்டது.

இந்நிலையில் முக்கிய முடிவாக போன் பே நிறுவனம் தங்கள் பரிவர்த்தனைகளை இனிமேல் முதற்கொண்டு ஐசிஐசிஐ வங்கியோடு இணைத்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து போன் பே வாடிக்கையாளர்கள் இனி தடங்கல் இன்றி தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என நம்பிக்கை அளித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News