
Cinema News
கமல் எடுத்த விடாமுயற்சி… ரஜினி வைத்த விக்… விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… இயக்குனர் சொல்லும் சுவாரசியங்கள்!
Published on
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ரஜினி, கமல், விஜயகாந்த் குறித்து தனது நினைவுகளை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். என்னவென்று பார்க்கலாமா…
அபூர்வசகோதரர்கள், அவ்வை சண்முகி போன்ற படங்களுக்கு எல்லாம் மேக் அப் போடுவதற்கே 3 மணி நேரம் வரும். ரஜினியைப் பொருத்தவரை விக் வைப்பதையே விரும்பாதவர். முரட்டுக்காளை படத்தில் கூட அந்தக் கேரக்டருக்காக விக் வைக்க சொன்னோம்.
ரஜினியைப் பொருத்தவரை அப்படி நடிக்க முடியாது. ஆனால் கமல் அதற்காக ஸ்ட்ரெய்ன் எடுத்து நடிப்பார். அதற்கான விதையைக் கொடுப்பார். அது அவரால தான் முடியும். அந்த வகையில் நடிப்பிலும் கமல் தான் சிவாஜிக்கு அடுத்தாற்போல வருபவர் என்று சொல்லலாம்.
கமலைப் பொருத்தவரையில் டெக்னிக்கலா தினமும் தன்னை அப்டேட் பண்ணிக் கொண்டே இருக்கிறார். அதனால் தான் இந்த அளவு வளர்ந்து வருகிறார். இது சாதாரணமாக வந்து விட்ட வளர்ச்சி இல்லை. என்றார் எஸ்.பி.முத்துராமன். அடுத்து விஜயகாந்த் உடனான தனது அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறார்.
SPM, VK
விஜயகாந்த் உடன் நல்லவன், தர்மதேவதை என 2 படங்கள் அவருடன் சேர்ந்து பண்ணியிருக்கேன். விஜயகாந்தும் நடிப்பிலும், காட்சியிலும் ரொம்ப ஈடுபாட்டுடன் செய்வார். காஷ்மீரில் சூட்டிங். சூப்பர் சுப்பராயன் தான் ஸ்டண்ட் மாஸ்டர். கிளைமாக்ஸில் அருமையான லொகேஷன். 600 அடிக்கு மேல. அங்க போறதுக்கு வரிக்குதிரை மேல தான் போக முடியும். காலைல 7 மணிக்குப் போனா 12 மணிக்குத் தான் போய்ச் சேர முடியும். பிரமாதம்… அருமையான லொகேஷன்னு பாராட்டினார் விஜயகாந்த்.
அங்கே போனா 3 மணிக்கு மேல சாப்பாடு வரலை. 4 மணியாச்சு. சாப்பாடு வரல. அப்போ அங்கே கஷ்டப்பட்டு சூட்டிங் எல்லாம் முடிச்சிட்டு நான் சூப்பர் சுப்பராயன்ட சொல்றேன். நாளைக்கு இந்த இடத்துக்கு வந்து பண்ணுனா பழையபடி 4 மணி நேரம் வேஸ்டா போயிடும். அதனால இதுக்குக் கீழே கொஞ்சம் இறங்கினா அங்கும் பனி உள்ள மலைகள்லாம் நிறைய இருக்கு. அதை மேட்ச் பண்ணி எடுத்துரலாம்னு சொல்றேன்.
திரும்பவும் குதிரை மேல ஏறி வர வேண்டாம்னு சொன்னதும் விஜயகாந்த் கேட்டுட்டாரு. உடனே சார் சார்…னு ஓடி வந்தாரு. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு லொகேஷன மாத்துற மாதிரி பேசுறீங்க. அது வேண்டாம் சார். கஷ்டப்பட்டாலும் நிச்சயமா அதுக்கு பலன் கிடைக்கும். அதனால இந்தக் கஷ்டத்தோடவே முடிச்சிடலாம் சார். நாளைக்கும் இதே இடத்துல வந்து சூட்டிங் பண்ணுவோம்னு சொன்னார். அது தான் விஜயகாந்த் என அவரது ஆர்வத்தைப் பற்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன்.
அதுமட்டுமல்லாமல் எல்லா விஷயத்திலும் ஈடுபாடோடு செய்தார் விஜயகாந்த். முக்கியமா அவரு செஞ்ச விஷயம் சாப்பாடு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியா இருந்த சாப்பாட்டை எல்லாருக்கும் ஒரே மாதிரியாக கொடுக்க வைத்தார் விஜயகாந்த்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...