கரூர் பற்றிய கேள்வி!.. எஸ்.ஏ.சி சொன்ன அந்த பதில்!.. மனுஷன் நொந்து போயிட்டாரே!…
விஜயை உருவாக்கிய எஸ்.ஏ.சி.
Vijay: நடிகர் விஜயை சினிமாவிலும் சரி.. அரசியலும் சரி.. அவர் வளர்வதற்கு அடித்தளம் இட்டவர் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான். இதை விஜயே மறுக்க மாட்டார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட விஜயை நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் அறிமுகம் செய்தார் எஸ்.ஏ.சி. தனது சொந்த பணத்தை போட்டு விஜயை வைத்து சில படங்களை தயாரித்தார். அதன் பின்னரும் விஜய்க்கு சரியான இடம் கிடைக்கவில்லை என்பதால் அப்போதிருந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர் பலரிடம் சென்று விஜய்க்காக வாய்ப்பு கேட்டார்.
ரசிகர்களை அரசியல்படுத்திய எஸ்.ஏ.சி
குறிப்பாக விஜய் ஒரு கட்டத்தில் வளர துவங்கியதும் அவருக்கு பக்கபலமாக இருந்தார் எஸ்.ஏ.சி. விஜயின் கால்ஷீட், அவர் நடிக்கும் படங்களில் கதை கேட்பது, அவரின் சம்பள விவகாரம் எல்லாவற்றையும் எஸ்.ஏ.சிதான் பார்த்துக் கொண்டார். அது மட்டுமில்லாமல் விஜய் ரசிகர் மன்றங்களை சரியாக வழி நடத்தி, அவற்றை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அவர்களை அரசியலுக்கு தயார்படுத்தியதும் இவர்தான். விஜயின் கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது வீட்டுக்கு வரவழைத்து அவர்களிடம் பேசி ஆலோசித்து அரசியல் தொடர்பான பணிகளை முடிக்கிவிட்டதும் எஸ்.ஏ.சி-தான். ஆனால், ஒரு கட்டத்தில் விஜய்க்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட மகனை விட்டு தனியக சென்று வசிக்க துவங்கினார் எஸ்.ஏ.சி.
விஜயின் அரசியலை விமர்சித்த எஸ்.ஏ.சி:
பாண்டிச்சேரியில் புஸி ஆனந்த் என்பவரை அழைத்து வந்து அவரை பொதுச்செயலாளர் ஆக்கினார் விஜய். உண்மையில் தற்போது புஸி ஆனந்த் இருக்கும் இடத்தில் இருந்து இருக்க வேண்டியவர் அவரின் அப்பா எஸ்.ஏ.சி-தான். துவக்கம் முதலே விஜயின் அரசியல் செயல்பாடுகளை ஊடகங்களில் எஸ்.ஏ.சி விமர்சித்தும் வந்தார். ‘புஸி ஆனந்த் இருக்கும் வரை இந்த கட்சி விளங்காது. அவர் பொய்யாக நடிக்கிறார். விஜய் அவரை நம்பிக்கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் ஓபனாக பேட்டி கொடுத்தார் எஸ்.ஏ.சி.
கரூர் சம்பவம்:
அதேநேரம் விஜயின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்த போது அங்கு நேரில் சென்று பார்த்த எஸ்.ஏ.சி ‘நான் கூட என்னவோ நினைத்தேன். ஆனால் விஜய் இப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்றெல்லாம் பாராட்டி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தவெகவிற்கும், விஜய்க்கும் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. இது தொடர்பாக விஜயை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மரண நிகழ்வுக்கு இன்று சென்ற எஸ்ஏசி-யிடம் கரூர் சம்பவம் பற்றிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது கோபப்பட்ட எஸ்.ஏ.சி ‘நான் இப்போது ஒரு துக்க நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். கரூர் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நாங்கள் கடுமையான சோகத்தில்தான் இருக்கிறோம். இப்போது அது பற்றி பேச முடியாது. புரிந்துகொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
