×

யார் இப்படி கொளுத்திப் போட்றாங்கன்னே தெரியல... கடுப்பான எஸ்.ஏ.சந்திரசேகர்...

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்குகளை கவர பிரபலங்கள தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை பாஜக தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

அதன் விளைவாக குஷ்பு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.  அதேபோல், திரையுலகில் கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், சுரேஷ், ஆர்த்தி உள்ளிட்ட சிலரும் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டனர். மேலும், பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், விஷால் உள்ளிட்டவர்களிடமும் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளார் என இன்று காலை முதல் செய்தி வெளியாகி வந்தது.

ஆனால், இந்த செய்தியை எஸ்.ஏ.சி. மறுத்துள்ளார். இதுபோன்ற செய்திகளை எங்கிருந்து இது போன்ற செய்திகளை பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை’ என அவர் விளக்கமளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News