1. Home
  2. Latest News

Vijay: எம்.ஜி.ஆருக்கு பின் என் மகன் விஜய்!... பெருமையா இருக்கு!. எஸ்.ஏ.சி நெகிழ்ச்சி...

sac vijay
எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

விஜய்

நடிகர் விஜய் சினிமா, அரசியல் என இரண்டு தளத்திலும் பயணிக்க அடித்தளமிட்டவர் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது விஜய் எடுத்த முடிவு. துவக்கத்தில் ‘அது உனக்கு வேண்டாம்’ என எஸ்.ஏ.சி அறிவுரை சொன்னாலும் விஜய் அதில் உறுதியாக இருக்க ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது விஜயை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முன்வரவில்லை. எனவே சொந்தக்காசு போட்டு சொந்த தயாரிப்பில் விஜயை வைத்து தொடர்ந்து திரைப்படங்களை எடுத்து வந்தார் எஸ்.ஏ.சி.

விஜய்க்காக பல தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்டார். விஜயின் சினிமா வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் எஸ்.ஏ.சி-தான் விஜய் நடிக்கும் படங்களின் கதையை கேட்பது, அவரின் சம்பளத்தை நிர்ணயிப்பது போன்ற எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக் கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் தன்னிச்சையாக செயல்பட தொடங்கினார். அதோடு பெற்றோரை பிரிந்து தனியாகவும் வசிக்கவும் தொடங்கினார்.

விஜய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே என்ன மனக்கசப்பு என்பதை இருவருமே எங்குமே வெளியே சொன்னதில்லை. ஆனாலும் ஊடகங்களிலும், சினிமா விழாக்களிலும், பேட்டிகளில் பேசும்போது தன் மகன் விஜய் பற்றி பெருமையாகவே பேசி வருகிறார் எஸ்.ஏ.சி. அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு மாநாடுகளிலும் எஸ்.ஏ.சி கலந்து கொண்டார்.

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சி ‘எம்.ஜி.ஆரின் 7 திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன். எம்ஜிஆர் எப்போதும் தனக்காக வாழ்ந்தது இல்லை. அரசியலுக்கு வந்தபின் அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அவருக்கு பின் அவரைப் போன்ற அரசியல்வாதியை யாரும் பார்க்கவில்லை. மறைந்தும் வாழ்கின்ற மனிதர்கள் சிலர் மட்டுமே.

தற்போது ஒருவர் அந்த இடத்தை மனதில் நினைத்து தன் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்து தானும் தமிழ்நாட்டு சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய மகன் என நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.