Connect with us
sac

latest news

TVK Vijay: விஜய் வெற்றி பெற எஸ்.ஏ.சி செய்து வரும் காரியம்!.. மகன் மேல் இப்படி ஒரு பாசமா?!..

SAC: சினிமாவிலும் சரி, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளிலும் சரி விஜய்க்கு வழிகாட்டியாக இருந்தவர் அவரின் தந்தை எஸ்.எ.சந்திரசேகர். சினிமாவில்தான் நடிப்பேன் என விஜய் அடம் பிடித்ததால் அவரை நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர். அந்த படம் ஓடவில்லை என்றாலும் அதன்பின் தொடர்ந்து ரசிகன், தேவா உள்ளிட்ட சில படங்களை தனது சொந்த தயாரிப்பில் இயக்கினார்.

விஜயை எப்படியாவது ஒரு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக எஸ்.ஏ.சி போட்ட உழைப்பு மிகவும் அபாரமானது. விஜயின் படங்கள் ஓடவில்லை என்பதால் அப்போதிருந்த பல முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என எல்லோரிடமும் சென்று விஜய்க்காக வாய்ப்பு கேட்டவர்தான் எஸ்.ஏ.சி.

sac
sac

விஜய் ஒரு கட்டத்தில் வளர துவங்கியதும் அவருக்கு வலதுகரமாக எஸ்.ஏ.சி இருந்தார். விஜய் நடிக்கும் எல்லா படங்களையும் அவர்தான் முடிவு செய்தார். ஒருபக்கம் விஜயின் ரசிகர் மன்றங்களையும் வளர்த்தார். விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, மெல்ல மெல்ல அரசியல் தொடர்பான வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தியது என எல்லாவற்றையும் துவங்கி வைத்தவர் எஸ்.ஏ.சி-தான். குறிப்பாக விஜயின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி விஜய் அரசியலுக்கு வர அடித்தளம் இட்டவர் எஸ்.ஏ.சி.

அதேநேரம் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயும், எஸ்.ஏ.சியும் பிரிந்தனர். விஜய் அரசியல் கட்சி துவங்கிய போதும் கூட அப்பாவை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. விஜய் தனி வீட்டிலும், எஸ்ஐசி தனது மனைவி ஷோபாவுடன் தனி வீட்டிலும் வசிக்க துவங்கினர். அதேநேரம் எந்த பேட்டியிலும் தனது மகன் விஜயை எஸ்.ஏ.சி விட்டுக் கொடுத்துப் பேசியது இல்லை.

தற்போது விஜய் அரசியலுக்கு வந்து முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். சமீபத்தில் கரூரில் நடந்த சோகமான சம்பவம் கூட விஜயின் மீது பலரும் விமர்சிக்க காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஒவ்வொரு மதியமும் பலருக்கும் எஸ்.ஏ.சி தரப்பில் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. உணவு வழங்கி பசியை போக்கி அதன் மூலம் பலரும் விஜயை வாழ்த்தினால் அது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு பயனாக அமையும் என எஸ்.ஏ.சி நம்புகிறாராம்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top