
Cinema News
இதுதான் என் வாழ்க்கையிலேயே பெரிய ஆசை! – மனைவியின் ஆசைக்காக விஜய்யின் அப்பா செய்த காரியம்..!
Published on
By
தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்து வருகின்றன.
தற்சமயம் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் இந்த படம் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பப்படுகிறது.
விஜய் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். சந்திரசேகர் அவர் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் விஜய்க்கு சின்ன சின்ன கதாபாத்திரங்களை அளித்து சிறு வயதில் இருந்தே விஜய்க்கு நடிப்பை பயிற்றுவித்து வந்தார்.
எஸ்.ஏ சந்திரசேகரின் பரிசு:
விஜய்யை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவரும் எஸ்.ஏ சந்திரசேகர்தான். இப்போதுமே இருவருமே பெரும் பணக்காரர்களாக இருந்தாலும் எஸ்.ஏ.சி உதவி இயக்குனராக இருந்தபோது பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
அப்போது அவரும் அவரது மனைவியும் பத்துக்கு பத்து அளவுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டில் மிகச்சிறிய கழிவறை ஒன்றுதான் இருந்தது. அப்போது ஒருமுறை தனது மனைவியிடம் உனக்கு இருக்குற பெரிய ஆசை என்ன? என கேட்டுள்ளார் சந்திரசேகர். அதற்கு அவரது மனைவி பெரிய அறையில் அட்டாச் பாத்ரூமோடு ஒரு வீடு வேண்டும் என கேட்டுள்ளார்.
அதன் பிறகு இயக்குனராக வாய்ப்பு கிடைத்து எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை. அந்த படம் முடிந்த உடனேயே அதில் கிடைத்த காசில் முதல் வேளையாக ஒரு வீட்டை கட்டி அதை தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர்.
இந்த அழகிய நினைவுகளை ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு...
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...