×

சபாஷ் சரியான போட்டி!.. வனிதாவுடன் பஞ்சாயாத்தை துவங்கிய மீரா மிதுன்.....

நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். கடந்த சில நாட்களாகவே  நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.
 

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மீரா மிதுன் பற்றி கருத்து தெரிவித்த வனிதா விஜயகுமர், அவரின் நடவடிக்கைகளை கண்டித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீரா மிதுன் டிவிட்டர் பக்கத்தில் ‘வனிதா நீங்களும் ஒரு நெப்போட்டிசம் பிராடக்ட்தான். வெளியில் உள்ளவர்களிடம் நான் நடத்தும் போரை உங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் உங்கள் சேர்த்துக்கொண்டு என்னை ரேக்கிங் செய்தீர்கள் ஆனால், நான் நல்லவள் என பின்னர் புரிந்து கொண்டீர்கள். என் புகழை உங்களால் ஏன் ஏற்க முடியவில்லை. ஈகோவா?’ என வனிதாவை வம்பிக்கு இழுத்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ண, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரிடம் சண்டை போட்டு ஒய்ந்துள்ள வனிதா விஜயகுமார், தற்போது மீரா மிதுனிடம் சண்டை போட துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News