vijay
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் பெயரையும் புகழையும் பயன்படுத்தி அவரது தந்தை நிறைய சர்ச்சையான காரியங்களில் ஈடுபட்டு வருவது ஊரறிந்த விஷயம் தான். இதனை விஜய் தட்டிக்கேட்பதும் அதனால் தந்தை மகன் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
அவ்வளவு ஏன்? நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்ஏ சேகரிடம் பேசுவதே இல்லை என்பது தான் உண்மை. அண்மையில் கூட அப்படியான ஒரு சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், விஜய்யின் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் அவரின் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தனர்.
இதை அறிந்த விஜய் உடனடியாக அதில் சம்மந்தப்பட்ட தாய், தந்தை உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரின் தாயும் தந்தையும் விஜய் வீட்டிற்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும் ஆனால், விஜய் அவர்களை திருப்பி அனுப்பியதாகவும் எஸ்ஏசி கூறியதாக செய்திகள் வெளியானது முழுக்க முழுக்க பொய் என தந்தை எஸ்.ஏ. சி விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கும் எனக்கு பிரச்சனை இருப்பதும் இருவரும் பேசாமல் இருப்பதும் உண்மை தான். ஆனால் அவர் தாய் சோபாவுடன் நல்ல உறவில் இருக்கிறார் என கூறி தெளிவான விளக்கம் கொடுத்தார்.
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…