நடிப்புக்கு டாட்டா காட்டிய விஜய்.. ஹீரோவாக களமிறங்கும் எஸ்ஏசி! இது நல்லா இருக்கே
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது விஜய் எச். வினோத் இயக்கத்தில் அவருடைய 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தான் அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு முழு மூச்சாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார் விஜய். அதற்கு முன்பாகவே அரசியல் சார்ந்த பணிகளை செய்து கொண்டு வருகிறார் விஜய்.
இப்பொழுதே அரசியல் களத்தில் விஜய் மீதான பயத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய மாநாட்டில் விஜய் பேசியது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆளும் கட்சியை நேரடியாக விமர்சனம் செய்ததில் இருந்து மத்தியில் இருக்கும் ஒன்றிய அரசு வரை சகட்டுமானக்கி விஜய் எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்,
இது உள் நாட்டில் இருக்கும் மற்ற அரசியல் கட்சிகளிடையே பீதியை கிளப்பியிருக்கிறது. எங்கே நம்ம கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேர்ந்து விடுவார்களோ என்ற பயமும் மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டு விட்டது. அப்படித்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல தொண்டர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதனால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு அனல் பறக்கும் தேர்தலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கிடையில் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தோடு சினிமாவிற்கு முழுக்க போட இருக்கிறார். இன்னொரு பக்கம் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். முற்றிலும் இளம் தலைமுறை கூட்டணியுடன் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தப் படத்திற்கு கூரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய எஸ்.ஏ.சி தயவுசெய்து இந்தப் படத்தை மக்கள் முன் நல்ல முறையில் எடுத்துச் செல்வது பத்திரிக்கையாளர்களின் கடமை. அதனால் நல்ல முறையில் கொண்டு போங்கள் என்று கூறியிருந்தார். மேலும் இந்த கூரன் திரைப்படம் ஒரு நாயை பற்றிய கதையாம். நாய்க்குள் இருக்கும் அந்த உணர்வை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.