விஜய் ஏன் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை தெரியுமா? எஸ்.ஏ.சி சொன்ன தகவல்
விஜய் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சி. விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அனைத்துக் கட்சியினரும் தங்கள் தொகுதியில் காலை முதலே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சினிமாவை விட்டு அரசியலில் நுழைந்த விஜய் தமிழகத்தில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்ர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது. பொதுவாகவே விஜய் தனது பிரச்சாரத்தை 6 மணிக்குள் முடித்து கொள்கிறார். கோடி ரூபாய் கொடுத்தாலும் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை என்ற கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார் விஜய். இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். பலரும் விஜய்க்கு எதிராக மீஸ்களை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் விஜய் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை என்ற குற்ற்ச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். அவ்ர் கூறியபோது, இதற்கு காரணம் கரூர் சம்பவத்தால் தான் விஜய் மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதில்லை. இரவில் பிரச்சாரம் செய்ய அவருக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் கரூரை மனதில் வைத்து தான் அதனை தவிர்க்கிறார். இருட்டில் தான் எல்லா தவறும் நடக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார் என்று அந்த பேட்டியில் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
