Categories: Cinema News latest news

மாநாட்டுல விஜய் பேசியதைப் பார்த்து மிரண்டுட்டேன்… எஸ்ஏ.சந்திரசேகரா இப்படி சொல்றாரு?

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை விஜய் தொடங்கியதில் இருந்து அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுவரை விஜய்க்கு மேடைகள்ல பேசத் தெரியாதுன்னு சொன்னவங்க வாயை எல்லாம் ஒட்டுமொத்தமா அடைச்சிட்டாரு.

வேகம்

Also read: கமல் படத்தில்தான் முதன் முதலாக அதிக சம்பளம் வாங்கினேன்..! நெகிழும் சத்யராஜ்

மாநாட்டுல பட்டையைக் கிளப்பி விட்டார். லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அப்படி ஒரு வேகமான பேச்சையும், ஆவேசத்தையும் கண்டவர்கள் கதிகலங்கி விட்டார்கள். குறிப்பாக பல அரசியல்வாதிகளுக்கு இது ஒரு கிலியை உண்டாக்கி விட்டது என்றே சொல்லலாம்.

படத்தில் பேசுவது போல

அதனால் தான் மாநாட்டில் விஜய் பேசிய டாபிக்கையே ஒரு வாரமாக வைத்து விமர்சித்து வந்தார்கள். ஒவ்வொரு வசனமும் படத்தில் பேசுவது போல வச்சி செய்து விட்டார் விஜய் என்றே சொல்லலாம். மேலும் எதிரியை யாருமே அப்பட்டமாக சொல்லமாட்டார்கள். ஆனால் விஜய் அதிலும் கெத்து காட்டி விட்டார்.

மாநாட்டில் விஜய்

vijay

இவர் தான் என்னோட எதிரின்னு திமுகவை போட்டுத் தாக்கி இருந்தார். அதன்பிறகு வந்த விமர்சனங்கள் வெவ்வேறு ரகங்கள். ஆனாலும் முதல் மாநாட்டையே வெற்றிகரமாக கொண்டு சென்றது பெரிய சாதனை தான். மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

மிரண்டுட்டேன்

மாநாட்டுல அப்படிப் பேசுவாருன்னு நினைக்கவே இல்லை. மிரண்டு போய் அரண்டு போயிட்டேன். என் புள்ளையா இப்படி வேகமா பேசுறாருன்னு அசந்துட்டேன். முதல்ல அப்படித்தான் 5 நிமிஷம் பார்த்துக்கிட்டே இருந்தேன். அப்புறம் கைதட்ட ஆரம்பிச்சிட்டேன். சினிமாவுல நடிப்பார் ஓகே.

Also read: யாருடா இளையராஜா?!.. கோபமாக கேட்ட கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!….

ஆனா ஸ்டேஜ்ல அப்படிப் பேசிப் பார்;த்ததே இல்ல. மனசுக்குள்ள இருந்த வேகம்… சொசைட்டிக்கு ஏதாவது பண்ணனும்னு தாகம் இதெல்லாம் தான் அவரை பேச வச்சிருக்குன்னு நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v