×

ஏமாற்றிய சச்சின் & சேவாக்… ஆனாலும் வெற்றி பெற்ற இந்தியா லெஜண்ட்ஸ்!

இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான சாலை விழிப்புணர்வு தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான சாலை விழிப்புணர்வு தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சாலைவிழிப்புணர்வுக்கான உலக லெஜண்ட்ஸ் அணிகள் மோதும் தொடர்  மும்பையில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி  வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகளை எளிதாக வெற்றி பெற்றது. அதையடுத்து இந்தியா மற்றும் ஸ்ரீலங்கன் லெஜண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய முனாப் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் சச்சின்(0), சேவாக்(3), மற்றும் யுவ்ராஜ்(1) ஆகிய வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று ஆடிய கைப் மட்டும் 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் இந்திய அணியின் தோல்வி உறுதி என்றான நிலையில் நிலைத்து நின்று விளையாடிய  இர்பான் பதான் அதிரடியில் புகுந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு 57 ரன்கள் சேர்த்து அணிட்யை வெற்றி பெறவைத்தார். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News