×

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சினின் மகன்…. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் சந்தேகம்!

மும்பை இந்தியன்ஸ் அணியினர் வெளியிட்ட புகைப்படத்தில் சச்சினின் மகன் அர்ஜுனும் இருந்தது ரசிகர்களுக்குக் கேள்வியை எழுப்பியுள்ளது.

 

மும்பை இந்தியன்ஸ் அணியினர் வெளியிட்ட புகைப்படத்தில் சச்சினின் மகன் அர்ஜுனும் இருந்தது ரசிகர்களுக்குக் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஐபிஎல் 13 ஆவது சீசன் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. முதல் போட்டியாக ஐபிஎல் தொடரின் இரு ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியினர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இருந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இதுபற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக துபாய் சென்றது தெரியவந்தது. ஏற்கனவே சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என சொல்லப்படும் நிலையில் அதற்கான அஸ்திவாரமாக இப்போது வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News