Connect with us
sadhguru

latest news

நேபாளத்தில் லிங்கபைரவி தேவி கோவிலில் பிரதிஷ்டை செய்த சத்குரு!..

பெண்மையின் சக்திமிக்க வெளிப்பாடான லிங்கபைரவி தேவி கோவிலை நேபாள நாட்டில் சத்குரு அவர்கள் நேற்று (மார்ச்.7) பிரதிஷ்டை செய்தார். இந்தியாவிற்கு வெளியில் முதல் முறையாக லிங்கபைரவி கோவில் நேபாள நாட்டில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு வழிகளில் சத்குருவிற்கும் நேபாளம் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் உள்ள ஆழமான தொடர்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

https://www.instagram.com/reel/Cpgln79IjF7/

நேபாளத்தில் லிங்கபைரவி தேவி கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பான தருணத்தை குறிக்கும் விதமாக மார்ச்-9 ஆம் தேதி அன்று அங்குள்ள கன்டிபத்தில் உள்ள துண்டிகேலில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை “தேவி உற்சவம்” என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. இப்பைரவி உற்சவம் சத்குரு யூடுயூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

பைரவி உற்சவத்தை நேரலையில் காண:-

இந்நிகழ்வில் இசை, நடனம், மற்றும் பக்தி ஆகியவற்றை வெளிபடுத்தும் ஆழமான கலாச்சார கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. இது லிங்கபைரவியின் தீவிரமான ஆற்றல் மற்றும் அருளில் உறைவதற்கும் அனுபவிப்பதற்குமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வேளையில், சத்குரு நடத்தவிருக்கும் சிறப்பு சத்சங்கத்தில் தேவியின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு, பங்கேற்பாளர்களுக்கு சக்தி வாய்ந்த தியானங்களையும் வழிநடத்துகிறார்.

isha

isha

நேபாளத்தில் உள்ள லிங்கபைரவி தேவி, இந்தியாவிற்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் தேவி கோவில் ஆகும். இந்தியாவில் கோவை ஈஷா யோகா மையம், கோபிசெட்டிப்பாளையம், சேலம் மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் லிங்க பைரவி கோவில்கள் அமைந்துள்ளன.

isha

இந்த கோவில்கள் அனைத்தும் தனித்துவமான வகையில் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தேவியை தரிசிக்க வருகின்றனர் என்றாலும், பெண்கள் மட்டுமே கருவறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு சாதிகள், மதங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top