சாய் அபயங்கரின் ரதிமா ப்ரோமோவுக்கே லைக்ஸ் அள்ளுதே!
Aug 22, 2026, 22:38 IST
'கட்சி சேர, சித்திர புத்திரி, பவழ மல்லி' போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், 'டியூட், கருப்பு' ஆகிய படங்களுக்கும் இசையமைத்தவர் தான் சாய் அபயங்கர்.
இவரது பாடல்கள் தான் இளசுகள் பலரின் ப்ளேலிஸ்ட்டில் இருக்கிறது. இப்போது 'ஓம், ராக்கா, பத்தா, பென்ஸ், மார்ஷல், சூர்யா 48, தமிழ் முருகன்' என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சாய்.
இவருடைய இசையில் உருவாகியுள்ள புதிய ஆல்பம் பாடல் தான் 'ரதிமா'. இதில் சாய் அபயங்கருடன் இணைந்து நடனமாடியுள்ளார் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' பட ஹீரோயின் பாக்யஶ்ரீ போர்ஸ்.
— abhyankkar (@SaiAbhyankkar) August 22, 2026
தற்போது, இப்பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. முழு பாடலை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.