Sai Abyankar: சாய் அப்யங்கர் ப்ளே லிஸ்ட்டில் இணைந்த அந்த இரு படங்கள்.. இவர்தான் இப்போ சென்ஷேசன்
தற்போது தமிழ் சினிமாவில் சென்ஷேசன் மியூஸிக் டைரக்டராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். பிரபல பாடகர்களான திப்பு - ஹரிணி தம்பதியின் ஒரே மகன் தான் இந்த சாய் அப்யங்கர். ஒரு காலத்தில் திப்புவும் ஹரிணியும் சேர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை இந்த சினிமாவிற்கு வழங்கியவர்கள். இப்போது அவருடைய மகனான சாய் அப்யங்கர் தன்னுடைய இசையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
தன்னுடைய ஆல்பம் பாடலை வெளியிட்டு இளசுகளை தன் பக்கம் இழுத்தார் சாய் அப்யங்கர். குறிப்பாக பெண் ரசிகைகள் அவருக்கு ஏராளம். ஏஆர் ரகுமானுக்கு பிறகு எப்படி அனிருத் கோலிவுட்டை தன் கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்தாரோ இப்பொழுது சாய் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். ரஜின், கமல், அஜித், விஜய் படங்கள் என்றாலே அனிருத் இசையாகத்தான் இருக்கும்.
இப்போது சூர்யா, விஜய்சேதுபதி, கார்த்தி இவர்களின் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் சாய். சூர்யாவின் கருப்பு படத்திற்கு அவர்தான் இசை. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸாகி வெற்றிபெற்ற திரைப்படமான டியூட் படத்திற்கும் சாய் அப்யங்கர்தான் இசையமைத்திருந்தார். அதில் அமைந்த பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றன. இளசுகளின் பல்ஸை பிடித்து எப்படிப்பட்ட இசையை வழங்க வேண்டும் என அறிந்து வைத்திருக்கிறார் சாய்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சாய் அப்யங்கர் அவருடைய up coming படங்களை பற்றி பேசியிருக்கிறார். கார்த்தி நடிப்பில் தயாராக உள்ள மார்ஷல் படத்திற்கு அவர்தான் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருக்கிறாராம். இந்தப் படம் ஒரு பிரீயாட்டிக் படமாக வரப் போகிறது. அதாவது 1980ல் நடக்கும் கதையாக மார்ஷல் படம் வரவிருக்கிறதாம். இந்தப் படத்தில் தான் கார்த்தியுடன் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளார்.
அடுத்ததாக விஜய்சேதுபதி பாலாஜி கூட்டணியில் உருவாகும் ஒரு படத்திற்கும் சாய் அப்யங்கர்தான் இசை. இந்தப் படமும் ஒரு பிரீயாட்டிக் படமாக உருவாக இருக்கிறது. 1960ல் நடக்கும் கதையாக இது தயாராக இருக்கிறதாம். இந்தப் படத்தை அட்லீதான் தயாரிக்கிறாராம். முதல் சந்திப்பிலேயே அட்லீ சாய் அப்யங்கரை இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

இந்த இரு படங்களுமே வெவ்வேறு ஜானரில் உருவாகப் போகிறது. வேற வேற எமோஷனல், அதனால் நானும் அந்த இரு படங்களுக்காக காத்திருக்கிறேன் என அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் சாய்.
