Thalaivar173: ரஜினியின் புதிய படத்தில் அந்த நடிகையா?.. வேறலெவல் அப்டேட்!..
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பல படங்களை இயக்கிய சுந்தர்.சி இயக்குகிறார் என சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. கடந்த பல வருடங்களாகவே ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை கொண்ட ஆக்சன் படங்களில் ரஜினி நடித்து வந்ததால் சுந்தர்.சியுடன் அவர் நடிப்பது நன்றாகவே இருக்கும்.. ஒரு ஜாலியான கலகலப்பான படமாக அது வெளிவரும் என ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.. எதிர்பார்த்தார்கள்..
ஆனால் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து சுந்தர்.சி அதிர்ச்சி கொடுத்தார். ரஜினிக்கு சுந்தர்.சி ஒரு ஹாரர் கலந்த காமெடி கதையை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால் சுந்தர்.சி இந்த படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. எனவே வேறு இயக்குனரை வைத்து படமெடுக்கும் முயற்சியில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
பலபேரிடம் கதை கேட்டவர்கள் பார்க்கிங் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணனை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. ஏனெனில் அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாம். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். வருகிற 2026 மார்ச் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறதாம்.
இது சிம்புவுக்கு சொல்லப்பட்ட கதை இல்லை. இது ஒரு தனிக்கதை எனவும் சொல்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் சாய் பல்லவி மற்றும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
