என் இடத்துக்கு வந்து கதை சொல்லுங்க!.. மணிரத்னத்தையே அலறவிட்ட சாய் பல்லவி!...
மருத்துவம் படித்துவிட்டு டாக்டராகாமல் நடிகையாக மாறியவர்களில் சாய் பல்லவியும் ஒருவர். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.அதன்பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் சாய்பல்லவி.
மாரி 2, NGK, ஷ்யாம் சிங்கராய் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளுடன் போரிடும்போது மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபாகா வர்கீஸ் வேடத்தில் அசத்தலாக நடித்திருந்தார் சாய்பல்லவி. இந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் சொன்னார்கள்.
தான் நடிக்கும் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதக்கிறார் சாய்பல்லவி. இல்லையெனில் நடிக்க மறுத்து விடுகிறார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் சாய் பல்லவி நடிக்க வைக்கலாம் என யோசித்திருக்கிறார்.
எனவே, இதுபற்றி பேச மணிரத்தினம் அலுவலகத்திற்கு சாய் பல்லவியை வர சொன்னபோது ‘என்னிடம் கதை சொல்ல வேண்டுமென்றால் என்னிடத்தில் வாருங்கள்’ என சொல்லிவிட்டாராம் சாய் பல்லவி. மிரண்டு போன மணிரத்தினம் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஓருவரை கதை சொல்ல அனுப்பி வைக்க கதையை கேட்டுவிட்டு ‘இந்த கதையில் என்னுடைய கதாபாத்திரத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை’ என சொல்லி ‘இந்த படத்தில் நடிக்க முடியாது’ என மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய மணிரத்னம் ‘நான் சாய் பல்லவியின் ரசிகன்’ என சொன்னது குறிப்பிடத்தக்கது.
