மலையாளத்தில் மலர் டீச்சராக முதன் முதலில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சாய் பல்லவி. அந்த கதாபாத்திரம் இளசுகளை வெகுவாக ஈர்த்தது. அனைவரும் அந்த கதாபாத்திரத்தை தன் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே பார்க்க ஆரம்பித்தனர். அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் சாய்பல்லவி.
அடிப்படையிலயே மருத்துவரான சாய்பல்லவி சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திரையுலகிற்கு பிரவேசித்தார். நடனத்தில் தன் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்துவார். தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் ஹிந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் பக்கம் சென்றால் அவர்கள் எதிர்பார்ப்பதை தன்னால் செய்ய இயலாது என்று எண்ணி அந்த வாய்ப்பை மறுத்தார்.
தமிழில் மாரி-2, என்.ஜி.கே போன்ற படங்களில் தன் கதாபாத்திரத்தை கனமாக காட்டியிருப்பார். பார்ப்பதற்கு மிக எளிமையான தோற்றத்தில் காணப்படும் இவர் பெரும்பாலும் மேக்கப் போடுவதை விரும்பமாட்டார். ஆனால் மற்ற பெண்களை பார்த்து சைட் அடிப்பாராம். அவர்கள் என்ன மாதிரியான ஆடையில் வருகிறார்கள், அவர்கள் அணியும் ஆபகரணங்கள் போன்றவற்றை ரசிப்பாராம்.
மேலும் நீளமான கூந்தலையுடைய பெண்கள் போகும் போது எவ்ளோ நீளமாக இருக்கிறது என்பது மாதிரியான ரசனையை உடையவராம். அந்த அளவிற்கு பெண்களை கூர்ந்து கவனிப்பாராம். தன் அம்மாவிடம் இதை பற்றி பகிர்ந்து பேசிக் கொண்டிருப்பாராம். இதை ஒரு பேட்டியில் கூறும் போது அவரே தெரிவித்தார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…