உலகில் பலரும், ஏன், பெரும்பாலான ஆண்கள் கூட ஆண்களை விட பெண்களே மிகவும் உயர்ந்தவள் என கூறுவார்கள். அவர்களுக்கு தான் பிரசவ வலி, மாதவிடாய் நாட்கள் என உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல வலிகளை கண்டாலும், அதனை எதிர்கொண்டு உலகம் முழுக்க பல்வேறு சாதனை பெண்கள் இருக்கின்றனர்.
இந்த கஷ்டங்களை எல்லாம் பலர் வெளியில் சொல்வது கிடையாது. ஏதோ அசிங்கமான விஷயம் என அதனை ஒதுக்கி வைக்கும் ஆட்களும் இங்கு இருக்கதான் செய்கிறார்கள்.
ஆனால், அந்த விஷயத்தை கூட தைரியமாக வெளியில் பகிர்ந்து கொண்டார் நடிகை சாய் பல்லவி. அவர்களிடம் மாதவிடாய் வரும். அந்த சமயம் ஷூட்டிங்கில் இருந்தால் என்ன செய்வீர்கள் என பெண் நிருபர் விஜே பார்வதி கேட்டிருப்பார்.
இதையும் படியுங்களேன் – என்னய்யா செஞ்சிருக்க.. யுவனின் மிரட்டும் இசையை கேட்டு வியந்து போன சூப்பர் ஹிட் இயக்குனர்.!
உடனே, சாய் பல்லவி, சற்றும் சளைக்காமல், ‘ அது இருக்கத்தான் செய்யும். அதுவும் முக்கியமாக, கஷ்டமான நடன காட்சிகள் இருக்கும் போது மாட்டிக்கொள்வேன். அந்த சமயம் ஷூட்டிங்கை நிறுத்த சொல்லவும் கூடாது. வேற வழி இல்லை நடனம் ஆகிவிடுவேன்.
அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க ரெஸ்ட் தான். பழ ஜூஸ் குடிப்பேன். எனது தந்தை கூட எனக்கு கால் அழுத்தி விடுவார். ‘ என மிகவும் வெளிப்படையாக பேசி இருப்பார் சாய் பல்லவி.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…