மாரி 2 தான் ஞாபகத்துக்கு வருது!.. காக்கி சட்டையில் சாய் பல்லவி.. நல்லா இருக்காரா? இல்லையா?
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சாய் பல்லவி நித்யா ரெட்டி என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷின் மாரி 2 படத்தில் ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி நடித்திருந்தார். அந்தப் படத்தில் இருந்ததை போலவே இப்படத்திலும் இருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கான கம்பீரமான தோற்றம் சாய் பல்லவிக்கு இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், சாய் பல்லவியின் இந்த புது காதாப்பாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ஓம் படத்தில் தனுஷ், மம்முட்டி, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நித்யா ரெட்டி, செம்மரக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும் அதிகாரியாகக் காட்டப்படுகிறார்.
மேலும், ஓம் படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாய் பல்லவியின் போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
