மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமானார் நடிகை சாய்பல்லவி. தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வரும் சாய் பல்லவிக்கு தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி நடனம் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்தார். நடிப்பு, நடனம் என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் உச்சம் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் தான் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.
இதையும் படிங்கள் : ப்ப்ப்பா என்னா உடம்புடா!…..ரகுல் ப்ரீத் சிங்கை வச்சு கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்….
தமிழில் தனுஷ் மற்றும் சூரியா இருர்வருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிப்பதற்கு முன் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன் பின்னர் தான் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று பாலிவுட் சினிமாவில் இரண்டு படங்களில் நடிக்க சாய்பல்லவியை அணுகியது.ஆனால் சாய்பல்லவி நடிக்க மறுத்துவிட்டார்.
ஏனெனில் படங்களில் கவர்ச்சி கல்ந்த காட்சிகள் இருப்பதால் மறுத்துவிட்டார். இவர் அடிப்படையிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர். பணம் கிடைக்கிறது என்பதற்காக எல்லா படங்களிலும் கமிட் ஆகாமல் தனக்கு ஏற்ற கதை உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த் செய்தியை அறிந்து பாலிவுட் சினிமா நடிகைகள் இப்படியும் ஒருத்தர் இருப்பாங்களா? என ஆச்சரியத்தில் உள்ளனர்.
Kaur: கடந்த…
Vijay TVK:…
கரூரில் விஜய்…
Vijay TVK:…
SAC: சினிமாவிலும்…