Categories: Cinema News latest news

எல்லாத்துக்கும் இருக்குற ஒரே டவுட்டு.. நச்சென பதிலை சொன்ன சாய் பல்லவி…

மலையாள சினிமாவில் பிரேமம் எனும் திரைப்படம் மூலம் இந்தியா முழுக்க தெரிந்த நடிகையாக மாறினார் சாய்பல்லவி. அதுவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மலர் டீச்சராக இன்னும் நினைவில் இருக்கிறார் சாய்பல்லவி.

அதன் பிறகு தமிழில் தியா, மாரி இரண்டாம் பாகம், என்.ஜி.கே போன்ற படங்களில் சாய்பல்லவி நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கில் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளன.

அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவி கலந்து கொண்டார். அப்போது பலவிதமான கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்து வந்தார். அப்போது அந்த தொகுப்பாளர், நீங்கள் அறிமுகமானது மலையாள சினிமாவில் ஆதலால் உங்களது தாய்மொழி என்ன என்று கேட்டுள்ளார்,

இதையும் படியுங்களேன் –   என்னய்யா பெரிய ராக்கி பாய்.?! எங்க கேப்டன் அப்போவே என்ன செஞ்சிருக்காருனு பாருங்க…

அதற்கு சற்றும் அசராமல் நான் கொடைக்கானல், கோத்தகிரி அருகில் உள்ள படுவா எனும் கிராமத்து பொண்ணு. அது தமிழகத்தில் தான் இருக்கிறது.  தமிழகம்தான் எனது பூர்வீகம். ஆகவே தமிழ் தான் எனது தாய் மொழி .என்று தைரியமாக கூறினார் சாய்பல்லவி.

சாய் பல்லவி முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும்  நிகழ்ச்சியில் தான் முதன்முதலாக கேமரா வெளிச்சத்தில் வந்தார். அதன் பிறகு தான் மலையாள சினிமாவில் அடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan