திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாய் பல்லவி... சுவாமி ஊர்வலத்தை தரிசித்த இந்திரன்ஸ் - ஸ்ரீலீலா!

 
om

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் - அத்தியாயம் 1: உதிரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் நாயகியான சாய் பல்லவி, இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும், நடிகர் இந்திரன்ஸ் மற்றும் நடிகை ஸ்ரீலீலா, திருவண்ணாமலை தெருக்களில் நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தைக் கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில், 'ஓம் - அத்தியாயம் 1: உதிரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த அதிரடி திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசிருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

ஆர்.டேக் ஸ்டுடியோஸ் மற்றும் வண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வரும் 'ஓம் - அத்தியாயம் 1: உதிரம்', தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கோவிலுக்கு வந்த சாய் பல்லவி, பக்தர்களுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தார் அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 

Tags

From Around the web