Categories: Cinema News latest news

மனைவியுடன் நடிச்சு அந்த படம் ஓடவே இல்லை!.. ராவணனை விட மோசமா மாறிய ரன்பீர் கபூர்?..

காதலித்து, கல்யாணமே முடிந்த நிலையில், அதன் பின்னர் தான் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா முதல் பாகம் பெரும் சொதப்பலை சொதப்பி பல நூறு கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதன் அடுத்த பாகத்திற்குள் தலையை கொடுக்காமல் அந்த இயக்குநரை கழட்டி விட்டு அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் முரட்டுத் தனமாக அனிமல் படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு கெட் அவுட்டு!.. அஜித்துக்கு கட் அவுட்டா?.. த்ரிஷாவின் ராங்கித்தனம் தாங்கலையே பாஸ்!

வரும் நவம்பர் மாதம் அனிமல் வெளியாகிறது. பிரம்மாஸ்திரா படத்துக்கு பிறகு தனது மனைவி ஆலியா பட் உடன் இணைந்து நடிப்பதையும் விட்டு விட்டு தொடர்ந்து ஷ்ரத்தா கபூர், ராஷ்மிகா மந்தனா என ஹீரோயினை மாற்றி உள்ள ரன்பீர் கபூர் ஷாருக்கானை போல தென்னிந்திய நடிகைகளை ஹீரோயினாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

பிரம்மாண்டமாக அடுத்து ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், ராவணனாக கேஜிஎஃப் நடிகர் யஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தில் சீதையாக ஆலியா பட் நடிப்பார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிரடியாக தனது மனைவியை தூக்கி விட்டார் ரன்பீர் கபூர் என்கிற அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!.. கட்டம் கட்டிட்டாங்க!..

ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து அடுத்து சாய் பல்லவியை தனது ஹீரோயினாக மாற்ற நடிகர் ரன்பீர் கபூர் முடிவு செய்துள்ளதாக அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளன. நானியின் ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி பெங்காலி பெண்ணாக நடித்து நடனம் ஆடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்த நிலையில், பாலிவுட்டில் சாய் பல்லவிக்கு பெரும் டிமாண்ட் நிலவி வருவதாகவும் சீதா கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி நல்ல தேர்வாக இருப்பார் என்றும் கூறுகின்றனர்.

 

Saranya M
Published by
Saranya M