×

பிரபாஸுக்கு வில்லனான சாயிப் அலிகான் …. சம்பளம் இவ்வளவா?

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக லங்கேஷ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சாயிப் அலிகான் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக லங்கேஷ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சாயிப் அலிகான் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாகுபலிக்கு பின்னர் பிரபாஸின் மார்க்கெட் அதிறி புதிறியாக எகிறியுள்ளது. இதனால் அவரை வைத்து இந்தியா முழுவதும் வியபாரம் செய்யும் படங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி பிரபாஸ் ராமனாக நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் லங்கேஷ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு இதுவரை வழங்கப்படாத சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News