இப்போ நாங்கள் ஒன்றாக... ரகசியம் உடைத்த சைந்தவி !

 
gv praksh  saindhavi

சைந்தவி - ஜிவி பிரிவு: 

பாடகி சைந்தவி தனது காதல் கணவரான ஜிவி பிரகாஷை விவாகரத்து செய்த பிரிந்த பின்னர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் பின்னணி பாடல் பாடி வருவதோடு மேடை கச்சேரிகளிலும் பாடல் பாடி வருகிறார். இவர்கள் இருவரும் பரஸ்பர மனதுடன் பிரிந்தாலும் கூட தற்போது வரை நண்பர்கள் என்ற முறையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .

இவரது மகள் அன்வி அப்பா வீடு அம்மா வீடு என இருவர் வீட்டிற்கும் சென்று வருவதும்... அப்பா அம்மாவோடு பழகுவதும். அவர்களுக்கு இடையே இருக்கும் பிரிவை மகள் உணரவில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூட தெரிவித்திருந்தார் .

நாங்கள் ஒன்றாக....

இந்த நிலையில் விவாகரத்து குறித்து பேசி இருக்கும் சைந்தவி.... உலகில் யாருக்குமே திருமணம் செய்துவிட்டு விவாகரத்துப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்காது. எங்களுக்கும் அப்படி ஒரு எண்ணமே இருந்ததில்லை. ஆனால், இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அது கடவுளின் விதி. 

gv praksh

இறுதிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் நாங்களும் நினைத்தோம். ஆனால், சில காரணங்களால் அது வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே இரண்டு பேரும் பேசி தான் பிரிந்தோம். எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து பிரிந்தோம்.

அதேபோல் இன்னும் நாங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். நல்ல நண்பர்களாகவும் இருக்கிறோம். எதற்காகவும் ரிஸ்க் எடுக்க கூடாது என்று நினைத்து தான் விவாகரத்து செய்தோம். ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. 

தேவையில்லாத பேச்சுக்களும் எங்களுக்கு இடையே இல்லை. எனக்கு எனது மகள் தான் பாசிட்டிவ் எனர்ஜி என சைந்தவி வித்தியாசமான கண்ணோட்டத்தில் விவாகரத்தை பார்க்கிறார். இது பார்ப்பவர்களுக்கே கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Tags

From Around the web