×

மாணவர்களோடு மாணவியாக தேர்வு எழுதிய சாய்பல்லவி - வைரல் புகைப்படம்!

மருத்துவ தேர்வு எழுதிய சாய்பல்லவி வைரலாகும் புகைப்படம்

 

தமிழ் , தெலுங்கு , மலையாளம் போன்ற திரைத்துறையில் முன்னணி நடிகையான சாய்பல்லவி ஒரு மருத்துவ பட்டதாரி. இவர்  ஜார்ஜியா நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்றால்  FMGE எனப்படும் Foreign Medical Graduate Examination தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும்.

இந்த தேர்வு, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு படித்தவர்கள் இந்தியாவில் FMGE தேர்வு எழுதத் தேவையில்லை. ஆனால், ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் கட்டாயம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே வேலை செய்ய முடியும்.

சாய்பல்லவி ஜார்ஜியா நாட்டில் படித்தவர் என்பதால் இன்று திருச்சி சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் இந்த தேர்வை எழுதினார். மாஸ்க் அணிந்து தலையில் முக்காடு போட்டுகொண்டு மாணவர்களோடு மாணவியாக தேர்வு எழுதிய சாய்பல்லவியை பின்னர் அடையாளம் கண்ட சக மாணவர்கள் அவரோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News