சிம்புவுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி? அப்போ கதையும் வெயிட்டாத்தான் இருக்கும்

நேஷனல் கிரஷ்: நேஷனல் கிரஷ் என்று ராஷ்மிகாவைத் தான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அனைவரின் கிரஷ்ஷாக மாறி இருப்பவர் சாய்பல்லவி. பிரேமம் படத்திற்கு பிறகு ஏற்கனவே அவர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் மலர் டீச்சர் ஆக கவனம் ஈர்த்தார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரணமான நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் இவைகளை வைத்து மட்டுமே ரசிகர்களை பெருமளவு ஈர்த்து இருக்கிறார் சாய்பல்லவி. இவருடைய படங்களில் பெரும்பாலும் இவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்திருக்கும்.
விஜய் அஜித்துக்கு நோ: அப்படித்தான் எல்லா படங்களையும் இவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். மற்ற நடிகை போல் இவர் நடித்து வந்திருந்தால் இன்று இவருடைய படங்களின் எண்ணிக்கை கூடி இருக்கும். ஆனால் அது அவருக்கு விருப்பம் கிடையாது. தான் நடிக்கும் படத்தில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இருக்க வேண்டும் என்பதுதான் இவருடைய எண்ணமாக இருக்கிறது. அதனால் தான் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்தும் அதை நிராகரித்திருக்கிறார் சாய்பல்லவி .
நல்ல கேரக்டர்: பெரும்பாலும் விஜய் அஜித் படங்கள் என்றாலே அவர்களுடைய மாஸ் தான் படங்களில் இருக்கும். ஹீரோயினுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்காது. அது சாய் பல்லவிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால் தான் விஜய் அஜித் என்றாலும் பரவாயில்லை. நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார். இவர் நடித்த பிரேமம்,அமரன்,என்ஜிகே, மாரி போன்ற படங்களை பார்த்தோம் என்றால் இவருடைய கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டு இருக்கும்.
மீண்டும் தமிழில்: அதே போல் தெலுங்கிலும் இவருக்கென ஒரு தனி மார்க்கெட் இருந்து வருகிறது. நேற்று கூட இவரது நடிப்பில் தண்டேல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருந்தாலும் சாய்பல்லவியின் கேரக்டர் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் சாய் பல்லவி. அதுவும் சிம்புவுக்கு ஜோடியாக களமிறங்குவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் சிம்பு படத்தில் நடிப்பதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தான் சொல்லப்படுகிறது.
பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு அவருடைய 49வது படத்தில் நடிக்க இருக்கிறார் .அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சாய்பல்லவியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது .இந்த படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படமாகும். அதனால் சாய்பல்லவி இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
சாய்பல்லவி உள்ளே வருகிறார் என்றால் அவருடைய கேரக்டரும் பெரிய அளவில் பேசப்படும் .படத்தின் கதையும் வெயிட்டாக தான் இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அப்படி. கதை நன்றாக இருந்தால் மட்டுமே தான் சாய்பல்லவி அந்த படத்தில் இருப்பார் .அதை வைத்து அந்த படம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும் .அதனால் சிம்புவுக்கு ஜோடி ஆகிறாரா சாய் பல்லவி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.