காட்டிய கவர்ச்சி கைவிடவில்லை: ஒருவழியாக நாயகியானார் சாக்ஷி
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியே அவருக்கு ஒரு அடையாளத்தை தந்தது.
Mon, 4 Jan 2021

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியே அவருக்கு ஒரு அடையாளத்தை தந்தது.
சாக்ஷி அகர்வால் சமூகவலைதளங்களில் பரபரப்பாக இயங்குபவர். தனது கவர்ச்சி படங்களை அடிகடி பதிவேற்றி இளைஞர்களை கவர்ந்து வருவார்.இவரது இந்த செயலுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. ஆம் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
திரில்லர் வகையை சேர்ந்த தி நைட் என்ற படத்தில்தான் இவர் நாயகியாக நடிக்கிறார். விது என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். ரங்கா புவனேஸ்வர் இயக்கும் இந்த படத்திற்கு அன்வர்கான் தாரிக் என்பவர் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. எப்படியோ கட்டிய கவர்ச்சி அவருக்கு கை விடவில்லை என்றே தோன்றுகிறது.