×

ஆசை இருக்கலாம் பேராசை இருக்க கூடாது... போட்டோஷூட்டோட நிறுத்திடணும் அம்மணி

தமிழ், தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகை சாக்‌ஷி அகர்வால், பிரபுதேவாவுடன் பகீரா என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். 
 
ஆசை இருக்கலாம் பேராசை இருக்க கூடாது... போட்டோஷூட்டோட நிறுத்திடணும் அம்மணி

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார். சமீபகாலமாக ஹீரோயினாக நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். 

அவர் இப்போது பிரபு தேவாவுடன் பகீரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வேலு நாச்சியார் கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்திருக்கிறார். அதுகுறித்து கேட்டபோது, ``நிறைய படங்களில் நடித்து நல்ல நடிகை என்று ரசிகர்களிடம் பெயர் வாங்க வேண்டும். வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. 

அதேபோல், வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிப்பதில் அலாதி பிரியம் இருக்கிறது. வேலு நாச்சியார் வேடமேற்று நடிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் அவர் தோற்றத்தில் போட்டோ ஷூட் செய்திருக்கிறேன். தென்னிந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் ராணி அவர்தான். அவர் கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்’’ என்று கூறியிருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News