ஸ்பெல்லிங் மிஸ்டேக்குமா.... குடியரசு தின வாழ்த்து கூறிய சாக்ஷியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது அழகிய டீசண்டான உடையில் சிம்பிளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குடியரசு தின வாழ்த்துக்கள் என ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். அதை கண்டுபிடித்து கமெண்ட் செய்து நக்கலடித்துவருகின்றனர் நெட்டிசன்ஸ்...