பாகுபலியை மிரட்டும் நக்சல் கும்பல்... என்ன விஷயமா இருக்கும்..?

`சலார்’ படத்தின் ஷூட்டிங் தெலங்கானாவின் கோதாவரிகனி நிலக்கரி சுரங்கம் அமைந்திருக்கும் பகுதியில் நடைபெற்று வருகிறது. படத்தை கோலார் தங்க வயல் பகுதியில் ஷூட் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கோதாவரி கனி சுரங்கம் பகுதியின் இயற்கை அழகைப் பார்த்து படக்குழு அந்த முடிவைக் கைவிட்டு, அங்கேயே ஷூட்டிங்கைத் தொடர்ந்து வருகிறது.
ஆனால், நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் படக்குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் ஷூட் செய்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதையடுத்து, ராமகுண்டம் போலீஸ் கமிஷ்னர் வி.சத்தியநாராயணாவை நேரில் சந்தித்து நடிகர் பிரபாஸ் இதுகுறித்து பேசியிருக்கிறார். பிரபாஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கமிஷ்னர், படக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்புக் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார். இதனால், 40 போலீசாரின் பாதுகாப்போடு ஷூட்டிங் நடந்து வருகிறதாம்.