60 வயசு ஆச்சு.... அறிவு இருக்கா? மருத்துவமனையில் நடத்த சம்பவம் - கொந்தளித்த சல்மான் கான்! ​​​​​​​

 
salman  khan

நடிகர் சல்மான் கான்:

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகர் சல்மான்கான் 60 வயதாகியும் தன்னுடைய மார்க்கெட் இழக்காமல். தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சல்மான் குறித்த ஒரு சர்ச்சைக்குரிய செய்தி சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு நடிகர் சல்மான்கான் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும் போது அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சத்தம் போட்டு முந்தியடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்தனர்.

salman khan

60 வயசு ஆச்சு.... அறிவு இருக்கா? 

அதை கண்டதும் கடும் கோபமடைந்த சல்மான்கான்... எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்ற விவஸ்த்தையே உங்களுக்கு இல்லையா? எனக்கு 60 வயதாகி ஆகிடுச்சு தான் ஆனாலும் நான் வலுவாக சண்டை போடுவேன்.... மறந்துவிடாதீர்கள் என்று எச்சரித்தார்.

salman khan

அத்துடன் தன்னுடைய வலியை வைத்து ஊடகங்கள் பிழைப்பு நடத்தக் கூடாது என்று கடிந்து கொண்டிருக்கிறார். அவர் உடல்நல பரிசோதனை காரணமாக சென்றிருக்கும் இந்த சமயத்தில் ஏற்கனவே உடலளவில் மிகவும் சோர்ந்து போயிருக்கும் சல்மான்கானுக்கு மனதளவில் வலியை கொடுத்திருக்கும் இந்த மீடியாக்கள் மீது அவரது ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Tags

From Around the web