×

மாஸ்டர் ரீமேக்கிலிருந்து விலகிய சல்மான்கான்.. .சொன்ன காரணம்தான் ஷாக்!....

 
salmankhan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய சேதுபதி, மாளவிகா மேனன் என பலரும் நடித்து ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். தமிழில் ஒரு படம் ஹிட் அடித்தால் அது பாலிவுட்டுக்கு செல்லும். அந்த வகையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் ஜரூராக நடந்தது. இத்தனைக்கும், ‘மாஸ்டர்’ திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டும் வெளியானது.

Master

ஆனாலும், நேரிடையாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டனர். விஜய் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அவருக்காக கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது. ஆனால், திடீரென அப்படத்திலிருந்து சல்மான்கான் விலகியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாஸ்டர் படத்தின் திரைக்கதை தனக்கு திருப்திகரமாக இல்லை என அவர் கூறியுள்ளார்.  எனவே, மாஸ்டர் ஹிந்தி ரீமேக் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

salman

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் கடைசியாக நடித்து வெளியான ‘ராதே’ திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டது. எனவேதான், யோசித்து அடியெடுத்து வைக்க சல்மான்கான் விரும்புகிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம்...

From around the web

Trending Videos

Tamilnadu News