×

உன்னை நம்பி கொடுத்தேன்....என்னை இப்படி வச்சி செஞ்சிட்டியே! பிரபுதேவாவை வெளுத்து வாங்கிய சல்மான்கான்...

 
radhe

நடிகர் பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் என்பதும் பலருக்கும் தெரியும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரிய ஹீரோக்களுக்கு ஹிட்டும் கொடுத்துள்ள்ளார். அட்டர் பிளாப் படங்களையும் கொடுத்துள்ளர். 

உதாரணத்திற்கும், விஜயை வைத்து அவர் இயக்கிய போக்கிரி தமிழில் மெகா ஹிட். அந்த படத்திற்கு விஜய் - நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய வில்லு திரைப்படம் அட்டர் பிளாப். அப்படத்திற்கு பின் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவே இல்லை.

radhe

அதேபோல், ஹிந்தியில் சல்மான் கானை வைத்து Wanted, Dabang 3 உள்ளிட்ட சில படங்களை பிரபுதேவா இயக்கியுள்ளார். அவற்றில் பலவும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது மீண்டும் சல்மான் கானை வைத்து அவர் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் ராதே. பக்கா ஆக்‌ஷன் திரைப்படமான இப்படம் ரசிகர்களை கவரவில்லை. இத்தனைக்கும் இப்படத்தில் கவர்ச்சி புயல் திஷா பத்தேனி நடித்திருந்தார். மேலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

விமர்சகர்களும் கழுவி கழுவி ஊற்ற ஓடிடியில் வெளியான ராதே திரைப்படம் ஊத்திக்கொண்டது. ஒரு ஸ்டாருக்கு கீழ் எதாவது ஸ்டார் இருக்கிறதா என சினிமா விமர்சகர்கள் கிண்டலடுக்கும் படி இப்படம் அமைந்துவிட்டதுதான் துரதிஷ்டம். போதா குறைக்கு ஓடிடியில் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் இணையத்திலும் இப்படம் வெளியாகி விட்டது.

இதனால் அப்செட் ஆன சல்மான் கான் பிரபுதேவாவை நேரில் அழைத்து ‘உன்னை நம்பி இப்படத்தை கொடுத்தேன். என்னை காலி செஞ்சிட்டே’ என்கிற ரீதியில் வெளுத்து வாங்கிட்டாராம். கானின் கோபத்திற்கு ஆளான பிரபுதேவா உடனடியாக விமானத்தை பிடித்து சென்னை திரும்பிவிட்டாராம்.

அனேகமாக இன்னும் சில வருடங்களுக்கு பாலிவுட் பக்கம் பிரபுதேவா செல்ல மாட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

கம்முன்னு தமிழ் சினிமாவுல நடிப்பா பிரபுதேவா!..

From around the web

Trending Videos

Tamilnadu News