×

என் படத்தை பார்த்தால்! - ரசிகர்களை மிரட்டிய சல்மான்கான்....

 
என் படத்தை பார்த்தால்! - ரசிகர்களை மிரட்டிய சல்மான்கான்....

பாலிவுட்டில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சல்மான்கான். இவரின் திரைப்படங்கள் பல கோடிகளை வசூல் செய்வதுண்டு. 

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ராதே.  இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. ஆனால், ஓடிடியில் வெளியாகி சில மணி நேரத்தில் இப்படம் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சல்மான்கான் ‘ராதே திரைப்படத்திற்கு நியாமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும் படி ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கிறோம். ஆனால், திருட்டுதனமாக படத்தை வெளியிடுவது பெரும் குற்றமாகும். அந்த இணையதளங்கள் மீது சைபைர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த இணையதளங்களில் ராதே படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்’ என அவர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News